
மகாராஷ்ட்டிர மாநிலத்தில் கொலைகள் நாளுக்குநாள் பல மடங்காக பெருகி வருவதாக
தேசிய குற்றப்பதிவு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த அலுவலக ஆவணப்படி
மாநிலத்தில் சராசரியாக மொத்தம் 83 பெண் மற்றும் குழந்தைகள் கொலை
செய்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் மகாராஷட்டிரா
டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. கடந்த 2008 முதல் 2012 வரை 5 ஆயிரத்து 158
பெண் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான கொலைகள், சந்தேகம் , நம்பிக்கைக்கு கேடு, கள்ள உறவு, மற்றும்
உறவு என்ற முறையில் ஏமாற்றுதல் ஆகிய பிரச்னைகளே முன்னோங்கி நிற்கிறது.
என்று இது போன்ற பெண் கொலை காரணம் குறித்து ஆய்வு செய்த மனநல நிபுணர்கள்,
குற்றப்பிரிவு வல்லுனர்கள் மற்றும் புலனாய்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆண் நண்பரால் கொலை :
சமீபத்தில்
கூட ஜூலை 5 ம் தேதி கஞ்சுமார்க் என்ற பகுதியில் நள்ளிரவில் ஒரு குடும்ப
பெண் பூஜா (வயது 19 ) அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்டார். இந்த
வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள்: பெண்களுக்கு எதிராக இது போன்ற வன்
செயல்கள் நடப்பது குறித்து ஆய்ந்து பார்த்ததில் 18 முதல் 30
வயதுக்குட்பட்ட பெண்களை அதிகம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பொறாமை
முக்கிய இடம் பிடித்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கொலை
செய்யப்படுவது சொத்து பிரச்னைக்காகவே இருக்கிறது. இதனை மாநகர குற்றப்பிரிவு
கமிஷனர் ஹிமன்சுராய் ஆமோதிக்கிறார்,
சமீபத்திய புள்ளிவிவர அறிக்கையின்படி ; 2008 முதல் 2012 வரை 2 ஆயிரத்து 614
கொலை, இதில் 17 முதல் 30 வயது வரையிலான பெண்கள் ஆவர், 30 முதல் 50
வயதுக்குட்பட்ட பெண்கள் கொலை வழக்கு ஆயிரத்து 541, இது போல் 50 வயதுக்கு
மேற்பட்டவர்கள் கொலையானது தொடர்பான வழக்குகள் 700 .
இளம் பெண்கள் எதனையும் எதிர்த்து போராடும் எண்ணம், அநீதியை கண்டு வெகுண்டு
எழுதல் மனம் கொண்டவர்களாக இருப்பதால் இது போன்ற வன்செயல்களை எதிர்கொள்ள
வேண்டியிருப்பதாகவும், இது போல் பெண்கள் எல்லா வயது காலங்களிலும் ஏதேனும்
ஒரு பிரச்னையால் வன் செயல்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் பிரபல மன நல
நிபுணர் டாக்டர் ஹரீஸ் ஷெட்டி கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், இளம்
வயதினர் இடையே உறவுகள் புளித்து போகும் போது இது போன்ற குற்றச்செயல்கள்
எழுகிறது. என்றும் சொல்கிறார்.
Comments