சீனாவில் பால் குடிக்கையில் மார்பை கடித்த குழந்தையை கத்திரியால் 90 முறை குத்திய தாய்

சீனாவில் பால் குடிக்கையில் மார்பை கடித்த குழந்தையை கத்திரியால் 90 முறை குத்திய தாய்பெய்ஜிங்: சீனாவில் பால் குடிக்கையில் மார்பை கடித்த 8 மாத குழந்தையை அதன் தாய் கத்திரியால் 90 தடவை குத்தியுள்ளார். சீனாவின் கிழக்கு பதியில் உள்ள ஜியாங்சு மாகாணம் சூசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு ஜியா பாவ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கையில் தாயின் மார்பை கடித்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கத்திரியை எடுத்து குழந்தையின் மீது 90 தடவை குத்தியுள்ளார். அதிலும் பெரும்பாலும் முகத்தில் குத்தியுள்ளார். அப்பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் வீட்டுக்கு வந்தபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அதை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அந்த பிஞ்சு உடலில் 100க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டன. குழந்தையின் தாய்க்கு மனநிலை சரியில்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

Comments