புத்தகயா: பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி
கோயில் அருகே 9 வெவ்வேறு இடங்களில் குண்டு வெடித்தன. இந்த சம்பவத்தில் 5
பேர் காயமடைந்ததனர். வீரியம் குறைந்த குண்டு என்பதால் கோயிலுக்கு எதுவும்
சேதம் இல்லை என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு
தீயணைப்பு வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் விரைந்துள்ளனர்.
முதல் குண்டுவெடிப்பு:
பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில் அருகே முதல் குண்டுவெடிப்பு அதிகாலை 5:15 மணிக்கு நடந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுவெடிப்பு நடநத்து. ஒரு வெடிகுண்டு கோயிலில் வெடித்தது. கோயிலின் அருகே வெடிக்காத குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழக்கூடும் என்று புலனாய்வுத்துறை ஒரு மாதம் முன்பே எச்சரித்திருந்தும் அதை சம்பந்தப்பட்டவர்கள் அலட்சியப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
Comments