
தொழிலாளர்கள் எதிர்ப்பு:
என்.எல்.சி.,யின்
5 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டதும், இந்த
நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை
சமாளிக்க,
விற்கப்படும் பங்குகளை தமிழக அரசே வாங்க முன்வந்தது. இதற்கு,
இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, பங்குகளை விற்பது
தொடர்பாக, மும்பையில் பேச்சு வார்த்தை நடந்தது. 6.44 சதவீத பங்கு, ஏற்கனவே
பொது முதலீட்டில் உள்ளதால், 5 சதவீதம் என்பதற்கு பதிலாக, 3.56 சதவீத
பங்குகளை, விற்பனை செய்ய வலியுறுத்தப் பட்டது. இந்த நடவடிக்கைக்கு, மத்திய
நிதி அமைச்சர், சிதம்பரம் தலைமையிலான, அதிகாரம் வழங்கப்பட்ட அமைச்சர்கள்
குழு, நேற்று கூடி விவாதித்தது. இதில், 3.56 சதவீத பங்குகளை விற்க,
ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, தமிழக அரசின், பொதுத் துறை
நிறுவனங்களுக்கு, 5.58 கோடி பங்குகள் விற்கப்படும்.
அடுத்த மாதம் விற்பனை:
இத்தகவலை, பொதுத் துறை பங்குகள் விலக்கல் துறை செயலர், ரவி மாத்தூர் தெரிவித்தார். இதையடுத்து, பங்குகள் விற்பனை நடவடிக்கை, அடுத்த மாதம், முதல் வாரம் துவங்கும். மத்திய அரசு, என்.எல்.சி.,யில், இதுவரை, 93.56 சதவீத பங்குகளை கொண்டு இருந்தது. நேற்று, மும்பை பங்குச் சந்தையில், என்.எல்.சி.,யின் பங்கு விலை, முந்தைய நாள் பங்கு விலையை விட, 4.24 சதவீதம் குறைந்து, 59.80 ரூபாயாக இருந்தது.
Comments