தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... சவரனுக்கு ரூ.344 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.304 உயர்ந்த தங்கத்தின் விலையில் இன்று(ஜூலை 23ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.344 அதிகரித்து இருக்கிறது.


சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,600-க்கும், சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.20,800-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் வி‌லை ரூ.455 உயர்ந்து ரூ.27,805-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையிலும் இரு தினங்களாக அதிரடி உயர்வு காணப்படுகிறது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.45-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.860 உயர்ந்து ரூ.42,055-க்கும் விற்பனையாகிறது.

Comments