300 பாக். தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயார்: ராணுவ அதிகாரி 'திடுக்'

ஜம்மு:இந்தியாவுக்குள் ஊடுருவ தகுந்த நேரத்தை எதிர்பார்த்து பாகிஸ்தான் எல்லையில் 300 தீவிரவாதிகள் காத்துக்கொண்டிருப்பதாக இந்திய ராணுவ உயரதிகாரி கூறியுள்ளார். ஜம்மு பகுதியில் உள்ள த

இது குறித்து ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா ‌பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
ராணுவ வீரர்களை தாக்க திட்டம்:நம்நாட்டில் ஊடுருவ நினைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அத்துமீறல்கள்
சமீப காலமாக அதிகரித்து ‌கொண்டே வருகிறது. நம் எல்லைக்குள் நுழைந்து சோதனைச் சாவடிகளில் காவல் காக்கும் இந்திய ராணுவ வீரர்களை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவர்களின் இது மாதிரியான பல்வேறு முயற்சிகளுக்கு நமது ராணுவம் தக்க பதிலடிகொடுத்துள்ளது.மேலும் அவர்களின் முயற்சிகள்,நம் ராணுவ வீரர்களால் பல முறை முறியடிக்கப்பட்டுள்ளன.

கண்ணி வெடி,துப்பாக்கி சூடு:நமது பதிலடி காரணமாக தீவிரவாதிகள், நமது ராணுவ நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். எல்லைக் கோட்டுப் பகுதியில் நமது வீரர்கள் நடமாடும் இடங்களில் கண்ணி வெடிகளை புதைத்து அட்டூழியம் செய்கின்றனர். 10 பேர் கொண்ட குழுக்களாக சுமார் 250 முதல் 300 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பூஞ்ச் எல்லைக் கோட்டின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர்.இத்தகைய நடவடிக்கயால் நமது ராணுவ வீரர்கள் அவர்களது நடவடிக்கையை கண்காணித்து மீண்டும் தக்க பதிலடி தரவேண்டும் இவ்வாறு ஹூடோ தெரிவித்தார்.
வி ஆற்றின் மீது ரூ.12.5 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழாவில் கலந்து ‌கொண்ட ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா இவ்வாறு தெரிவித்தார்.

Comments