சர்வதேச கால்பந்துப் போட்டியில் தமிழீழ அணிக்கு 3வது இடம்!

ஐஸில் ஆப் மேன்: ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச கால்பந்துப் போட்டித் தொடரில் தமிழீழ அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. 3வது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில், தமிழீழ அணி ரேஷியா என்ற அணியுடன் மோதி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இந்தப் போட்டியை பெரும் திரளானோர் பார்த்து ரசித்தனர். தமிழீழ அணிக்கு எடுத்த எடுப்பிலேயே சர்வதேச போட்டி ஒன்றில் 3வது இடம் கிடைத்திருப்பது தமிழீழ மக்களிடையே மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments