நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்தவர் மதிவாணன்
(45). இவரது முதல் மனைவி அனிதா என்பவர் சமீபத்தில் நெல்லை போலீஸ்
கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், மதிவாணன் என்னை காதலித்துத்
திருமணம் செய்து கொண்டார். வீட்டு உபயோகப் பொருட்கள் வியாபாரம் செய்து
வருகிறார்.
எங்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், எனக்கு தெரியாமலேயே
களக்காட்டை சேர்ந்த மரகதம், மதுரையை சேர்ந்த சரோஜினி ஆகிய பெண்களையும்
திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளார்.
இப்போது என்னையும், குழந்தைகளையும் பரிதவிக்க விட்டுவிட்டு கேரள மாநிலத்தை
சேர்ந்த சரிதா என்ற 4-வது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனவே
கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதிவாணனை தேடிவந்தனர். இந்த
நிலையில் மதிவாணனும், சரிதாவும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கோவை
அருகே வெள்ளக்கிணறு பகுதியில் தாங்கள் வாடகைக்கு வசித்து வந்த வீட்டில்
கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
15 ஆண்டு காதல்...
சரிதாவும், மதிவாணனும் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காதலித்து
வந்துள்ளனர்.
ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு
தெரிவித்ததால் பிரிந்து விடலாம் என்று கூறி பிரிந்துள்ளனர். ஆனால்
உண்மையில் பிரியவில்லை. தொடர்ந்து ரகசியமாக காதலைத் தொடர்ந்துள்ளனர்.
அதேசமயம், மதிவாணன் அனிதாவைக் காதலித்து மணந்து கொண்டார். அவர்களுக்கு 4
பிள்ளைகள் பிறந்தன. அதேபோல சரிதாவும், கேரளாவைச் சேர்ந்த சோபனன் என்பவரை
மணந்து 2 பிள்ளைகளைப் பெற்றார். பிறகு கணவருடன் மஸ்கட் போய் விட்டார்.
இடையில்தான் அனிதாவைத் தவிர மேலும் 2 பெண்களை மோசடியாக திருமணம்
செய்துள்ளார் மதிவாணன்.
திருமணத்திற்குப் பிறகு நேரில் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதால்
பேஸ்புக்கில் கணக்கை தொடங்கி அதன் மூலம் சாட்டிங், பேச்சு என்று
மதிவாணனும், சரிதாவும் காதலைத் தொடர்ந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து
வாழவும் தீர்மானித்தனர். இதையடுத்து சரிதா,
இந்தநிலையில் ‘பேஸ்புக்' மூலம் மீண்டும் மதிவாணன், சரிதாவுடன் தொடர்பு
கொண்டார். அப்போது அவர்கள் மீண்டும் சேர்ந்த வாழ முடிவு செய்தனர். இதனால்
சரிதா 30 பவுன் தங்கநகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றுடன் ஊர் திரும்பினார்.
பின்னர் மதிவாணனும், சரிதாவும் சந்தித்துக் கொண்டனர். பழைய உணர்வுகளையும்,
நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் இருந்த தனித் தனியா
வாழ்க்கையை காற்றில் பறக்க விட்டு சேர்ந்து வாழ முடிவு செய்தார்கள்.
சரிதாதான் வற்புறுத்தினார்
சரிதாதான், நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று மதிவாணனை
வற்புறுத்தியுள்ளாராம். இதையடுத்து மதிவாணன் அவருடன் கிளம்பி விட்டார்.
3 மாதங்களுக்கு முன்பு மதிவாணனும், சரிதாவும் வெள்ளக்கிணறு பகுதிக்கு வந்து
வாடகை வீட்டில் குடியேறினார்கள்.
சரிதா தனது 2 குழந்தைகளையும் தாயிடம் விட்டுவிட்டு வந்து விட்டார். தான்
போகும் இடத்தை அவர் சொல்லவில்லை. இந்த நிலையில் சரிதாவின் சகோதரர் தனது
தங்கையைக் காணவில்லை என்று கூறி திருச்சூர் காவல் நிலையத்தில் புகார்
கொடுத்தார். திருச்சூர் போலீஸார் தேட ஆரம்பித்தனர்.
அதேபோல அனிதாவின் புகாரின் பேரில் மதிவாணனையும் போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான் இருவரும் தற்கொலை செய்த செய்தி வந்து சேர்ந்தது.
இதையடுத்து போலீஸார் வீட்டுக்குள் புகுந்து பார்த்தபோது இருவரும் தூக்கில்
தொங்கிய நிலையில் இருந்தனர்.
அனிதாவின் கைகள் முன்புறமாக கட்டப்பட்டிருந்தது. அதேபோல மதிவாணனின் கைகள்
பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.
கடைசி நேரத்தில் உயிர் பிழைத்து விடக்
கூடாது என்பதற்காக இவ்வாறு அவர்கள் கட்டியிருக்கலாம் என போலீஸார்
தெரிவித்தனர்.
இரு வீட்டாருக்கும் தகவல் போய் அவர்கள் அலறி அடித்து ஓடி வந்தனர்.
சரிதாவின் பிணத்தைப் பார்த்து அவர் பெற்ற இரண்டு குழந்தைகளும் அலறித்
துடித்து அழுத காட்சி பார்ப்போரை பதற வைத்தது. அதேபோல அனிதாவும் தனது
குழந்தைகளுடன் கணவர் பிணத்தைப் பார்த்து கதறித் துடித்து அழுதார்.
படம் - தந்தி
Comments