டெஸ்ட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!!

டெஸ்ட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!!துபை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிவுகளின் அடிப்படையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 135 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்திய அணி 116 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இங்கிலாந்து அணி 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. அந்த அணி 112 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. 105 புள்ளிகளுடன் 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் 102 புள்ளிகளுடன் ாகிஸ்தான் 5வது இடத்திலும் இருக்கின்றன. 99 புள்ளிகளைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 6வது இடத்திலும் 88 புள்ளிகளுடன் இலங்கை 7வது இடத்திலும் 79 புள்ளிகளுடன் நியூசிலாந்து 8வது இடத்திலும் இருக்கின்றன. வங்கதேசம் 10 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஜிம்பாப்வே அணி இடம்பெறவில்லை. அந்த அணி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.

Comments