2 மாடல்களில் புதிய நிசான் மைக்ரா விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

ரூ.4.79 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட 2013 மாடல் நிசான் மைக்ரா கார் மும்பையில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ரூ.3.50 லட்சத்தில் குறைந்த விலை கொண்ட புதிய மைக்ரா மாடலையும் விற்பனைக்கு கொண்டு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது நிசான்.
டட்சன் பிராண்டு காரை விரைவில் நிசான் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், குறைந்த விலை மைக்ரா என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என கருதப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட மைக்ரா கார் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனிலும் விற்பனைக்கு கிடைக்கும். முதலில் மேம்படுத்தப்பட்ட புதிய மைக்ரா காரை பற்றிய விபரங்களையும், அடுத்து ஆக்டிவ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குறைந்த விலை மைக்ரா காரின் விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பிரிமியம் அம்சங்கள்
2013 மாடலாக வந்திருக்கும் புதிய மைக்ரா கூடுதல் பிரிமியம் அம்சங்கள் கொண்டதாக வந்துள்ளது. பழைய மைக்ராவைவிட மேம்படுத்தப்பட்ட புதிய மைக்ரா 45 மிமீ கூடுதல் நீளம் கொண்டது. பபின்புறம் எல்இடி டெயில் லைட்டுகள் கொண்டுள்ளது. புதிய அலாய் வீல்களும் நிசான் மைக்ராவுக்கு கூடுதல் தோற்றப் பொலிவை கொடுக்கும்.

இருக்கை டிசைன்
கால்களுக்கு நல்ல சப்போர்ட் தரும் வகையில் இருக்கை டிசைன் மாற்றப்பட்டுள்ளது. சென்ட்ரல் கன்சோல் சில்வர் லைன்களுடன் கருப்பு வண்ணத்தில் புதிய காம்பினேஷனுடன் அலங்கரிக்கிறது.

எஞ்சின்
75 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 65 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடனும் புதிய மைக்ரா கிடைக்கும்.

வசதிகள்
கீலெஸ் என்ட்ரி, கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ்போர்ட் வசதிகொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட் ஆகியவையும் கூடுதல்.

ஆட்டோமேட்டிக்
பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை கொண்டிருக்கும். பெட்ரோல் மாடல் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலிலும் கிடைக்கும். இந்தியாவில் முதன்முறையாக எக்ஸ்ட்ரோனிக் சிவிடி கியர் பாக்ஸ் கொண்ட முதல் ஹேட்ச்பேக் காராக வந்திருக்கிறது.

மைலேஜ்
5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.44 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட டீசல் மாடல் லிட்டருக்கு 23.08 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது. பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலைவிட ஆட்டோமேட்டிக் மாடல் அதிக மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்
மைக்ரா எக்ஸ்எல் ரூ.4.79 லட்சம் மைக்ரா எக்ஸ்எல் ஆப்ஷன் பேக் ரூ.5.43 லட்சம் மைக்ரா எக்ஸ்வி சிவிடி ரூ.6.39 லட்சம்.
டீசல்
மைக்ரா எக்ஸ்எல் ரூ.6.00 லட்சம் மைக்ரா எக்ஸ்எல் ஆப்ஷன் பேக் ரூ.6.43 லட்சம் மைக்ரா எக்ஸ்வி ரூ.6.90 லட்சம் மைக்ரா எக்ஸ்வி பிரிமியம் ரூ.7.14 லட்சம்.

Comments