தூத்துக்குடி: 23 முறை தற்கொலை செய்ய முயன்று தோல்வியுற்று உயிர்
பிழைத்த உப்பளத் தொழிலாளி தனது 24வது முயற்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள எம்.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல். 55
வயதான இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்களும்
உள்ளனர். உப்பளத் தொழிலாளியாக இருந்து வந்தார் சக்திவேல்.
தினசரி குடிப்பார். குடிப்பழக்கம் வீட்டில் சண்டையை இழுத்து வந்தது.
வீட்டினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனைவியிடம் அடிக்கடி
குடிக்கப் பணம் கேட்டு தகராறு செய்வார். மறுத்தால் தற்கொலைக்கு
முயல்வாராம்.
இப்படி 23 முறை தூக்குப் போட்டும் பிற வழிகளிலும் தற்கொலைக்கு முயற்சித்து
உயிர் தப்பியுள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்றும் மனைவியிடம் பணம்
கேட்டு சண்டை போட்டார். மனைவியோ பணம் தரவில்லை. இதனால் கோபமடைந்த அவர்
அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டார்.
ஆனால் இந்த முறை அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. மாறாக கழுத்து
நெரிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
Comments