புதுடில்லி: கணக்குதாரர்கள் விவரம் குறித்து முறையாக சேகரிக்காமை,
வெளிநாட்டு கரன்சிகளை கணக்கில் வராமல் மாற்ற உதவுதல் ( ஹவாலா ) , கறுப்பு
பணமாற்றல், நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்கள் செய்த 22 வங்கிகளுக்கு மத்திய
ரிசர்வ் பாங்க்., ஆப் இந்தியா 49. 5 கோடி அபராதமாக விதித்துள்ளது. மேலும்
பல்வேறு வங்கிகளுக்கு நோட்டீஸ் விடப்பட்டதில் வங்கிகள் உரிய காரண
விளக்கங்களை சொல்ல தவறி இருப்பது குறித்தும் ரிசர்வ் வங்கி அதிருப்தி
தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்டேட்பாங்க் ஆப்
இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, கனரா பாங்க்., பாங்க் ஆப் பரோடா, சென்ட்ரல்
பாங்க் ஆப் இந்தியா , இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்., மற்றும் பெடரல் பாங்க்,
ஆகிய வங்கிகளுக்கு தலா ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போல்
யுனைட்டடு பாங் ஆப் இந்தியா, லஷ்மிவிலாஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க்,
ஜம்மு- காஷ்மீர் பாங்க், ஆந்திரா பாங்க், ஆகியவற்றுக்கு தலா 2. 5 கோடி
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யெஸ் பாங்க், விஜயா பாங்க், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், மற்றும்
தனலட்சுமி பாங்க்., ஆகியவற்றுக்கு தலா ரூ கோடியும் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
இது போல் இன்னும் பல்வேறு பாங்குகளுக்கு எச்சரிக்கை நோட்டீசும், விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது
போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்கனவே ஐ.சி.ஐ.சி.ஐ. , ஆக்சிஸ்,
எச்.டி.எப்.சி. ஆகிய பாங்குகளுக்கு ரூ. 10.5 கோடி ஏற்கனவே ரிசர்வ் வங்கி
அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments