
ராமேஸ்வரத்தில் அவர்
கூறியதாவது: மூன்று டன் எடையுள்ள பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியை விட இரு மடங்கு
வேகமாக சென்று,
290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை, கடல், தரை வழியாக சென்று,
தாக்கக்கூடியது. இது தற்போது, ராணுவம், கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு
உள்ளது. இதுதவிர, போர் விமானத்தில் இருந்து, இந்த ஏவுகணையை செலுத்தி, எதிரி
இலக்கை தாக்கும் வகையில், இதன் எடையை இரண்டரை டன்னாக குறைத்து,
மேம்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, சுகாய் ரக போர் விமானங்களை
மறுவடிவமைப்பு செய்யும் பணியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான
சோதனை, அடுத்தாண்டு நடைபெறுகிறது. வெற்றிகரமாக முடிந்தால், 2015 ல் இந்த
ஏவுகணை விமானப்படையிடம், ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, உலகில் ஒரே ரக
ஏவுகணையை, முப்படையிலும் பயன்படுத்தும் நாடு, இந்தியாவாக தான் இருக்கும்.
மேலும், ஒலியை விட 3 மடங்கு, வேகமாக செல்லும், பிரம்மோஸ் 2 ஏவுகணை திட்டம்,
ஆராய்ச்சியில் உள்ளது. இவற்றை வாங்க, பல நாடுகள் விருப்பம் தெரிவித்து
இருந்தாலும், விற்பனை செய்ய இந்திய, ரஷ்யா அரசுகள் தான் முடிவெடுக்க
வேண்டும். மாணவர்கள், பொறியியல் படிப்பில் ஆர்வமாக உள்ளனர். இதைவிட,
அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, மத்திய அரசு,
அதிக நிதியுதவி வழங்கிறது, என்றார்.
Comments