மத்திய தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் ரூ. 1 லட்சத்து
76 ஆயிரம் கோடி நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை
தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் மற்றொரு நடவடிக்கையாக வருவாய் அமலாக்க துறையினர் இதில் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதன்படி மும்பையில் உள்ள டி. பி., ரியலிட்டி லிமிட்டெட் 2 ஆயிரத்து 831 கோடி, , டில்லியில் உள்ள லூப் டெலிகம் லிமிடெட் ( 549 கோடி ) ,மும்பையில் உள்ள லூப் மொபைல் இந்திய லிமிடெட் ( 26 கோடி ) , சென்னையில் உள்ள ஈட்டா ஸ்டார் டெவலப் பிராப்பர்ட்டி பிரைவேட் லிமிடெட் 399. 50 கோடி, உள்ளிட்டவை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
Comments