வாஷிங்டன் : இன்னும் சில தினங்கள்தான்... அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற ட்ரில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.
தற்போதைய சூழலில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டாலும், ஒபாமாவுக்கு சற்றே சாதகமான நிலை உள்ளது என்பதே உண்மை.
ஒரு சதவீதம் ஆதரவு...
ஃப்ளோரிடா, வர்ஜினியா இரண்டையும் எட்டிப்பிடித்து விட்டால் ஒபாமாவுக்கு
கடும் நெருக்கடி கொடுக்கும் நிலையில் ராம்னி இருக்கிறார். காரணம், இந்த இரு
மாநிலங்களிலும் ராம்னிக்கு ஒரு சதவீதம் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்
கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன் நடந்த வெளியுறவுக்
கொள்கை தொடர்பான விவாதத்தில் ஒபாமா, ராம்னி இருவருமே இந்தியாவுடனான உறவு
குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
நேரிடையாக குறிப்பிடாவிட்டாலும், அவர்களின் மற்றைய விவாதங்கள், மற்றும்
முந்தைய செயல்பாடுகளைக் கொண்ட, இந்தியாவுடன் இருவருடைய நிலைகள் என்ன என்று
கணிக்க முடியும்.
பாகிஸ்தானுக்கு யார் ஆதரவு?
தங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அல் கொய்தாவுக்கு ஆதரவாக செயல்பட்டு
இரட்டை நிலை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப் பட்டது. பாகிஸ்தானின்
ஒரு பகுதியிலேயே ஒசாமா பின் லாடன் பதுங்கி இருந்ததும், பாகிஸ்தானின் அனுமதி
இல்லாமலேயே, அமெரிக்க சீல்ஸ் படையினர் சென்று ஒசாமா பின் லேடனை சுட்டு
வீழ்த்தியதும், பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை அமெரிக்கா இழந்து விட்டதற்கான
அடையாளமாகவே கருதப்படுகிறது. அமெரிக்காவின் நிதியுதவியும் பெருமளவில்
குறைக்கப்பட்டுள்ளது.
ராம்னியின் பாக் பாசம்!
பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கையில்
போய்விடக்கூடாது. அதனால் பாகிஸ்தானின் நிலையான ஆட்சி தொடர நாம் பொருளாதார
உதவி செய்து உறவை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்.
சீனாவும் அமெரிக்காவும்
முதலாளி வர்க்கம் சீனாவில் முதலீடு செய்வதை விரும்பும் போது, தொழிலாளி
வர்க்கத்தினரோ சீனாவின் பெயரைக் கேட்டாலே விஷமுண்டது போல் முகம் சுளிக்க
ஆரம்பித்து விட்டனர்.
'மேட் இன் சீனா'...
ராம்னியோ தனது தொழில் நிறுவன்ங்கள் மூலம் ஏற்கனவே சீனாவில் பெரும்
முதலீடுகள் செய்துள்ளார். அமெரிக்க நிறுவன்ங்களை வாங்கி, தொழிற்சாலையை
சீனாவுக்கு ஏற்றுமதி செய்தவர் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது
அடுக்கடுக்காக சுமத்துப்பட்டு வருகின்றன.
பண மதிப்பை குறைத்துக் காட்டும் சீனா
ஒபாமாவோ, ஏற்கனவே தான் சீனாவுக்கு கட்டுப்பாடுகள் விதித்து, அதன் மூலம்
வர்த்தகத்தை நெறிப்படுத்தி வருவதாகவும், சீனாவுக்கு அமெரிக்க ஏற்றுமதி
இரட்டிபாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது வர்த்தக விஷயத்தில் சீனா உலக
வர்த்தக நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் இருவரும்
கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருக்கின்றனர்.
சீனாவுடன் கூட்டு வைக்க விரும்பும் ராம்னி
ஒபாமாவின் பார்வையோ...
அதிபர் விவாதத்தில், இந்த ராணுவ நடவடிக்கையை குறிப்பிட்ட ஒபாமா, சீனாவுடன் வர்த்தகரீதியான உறவுகளை தொடரும் வேளையில், கிழக்காசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்கவும் செய்யவேண்டும். சீனா ஏனைய நாடுகள் போல் சரியான வர்த்தக கொள்கைகளை கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா எங்கே வருகிறது?
சிறிது காலத்திற்குப் பிறகு மாண்வர்களிடம் உரையாடும் போது கணிதம், அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள், இந்தியாவில் வளரும் குழந்தைகளுடன் நீங்கள் போட்டியிட்டால்தான் ஜெயிக்க முடியும். வேலை வாய்ப்பு கிடைக்கும், என்று அமெரிக்கர்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டினார். ஒரு வகையில் இந்திய கல்வி முறைக்கும், இளைஞர்களின் திறமைக்கும் ஒபாமா தந்துள்ள பெரிய அங்கீகாரம் இது. பெருமைக்குரிய விஷயம்தானே!
அமெரிக்க கல்விக் கொள்கையில் மாற்றம்
மேலும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகித்தால் தான், அமெரிக்காவின் முதல் நிலை தொடரமுடியும் என்றும் அவர் நம்புகிறார்.
இந்தியாவில் கல்வி வியாபாரமாகிக் கொண்டிருக்கும் வேளையில், நடுத்தர மற்றும் ஏழை மக்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்று ஒபாமா திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவின் திட்டங்களை கருத்தில் கொண்டு, கல்வி விஷயத்திலும், புதிய அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் விஷயத்திலும் இந்தியா தீர்க்கமான தீவிர முடிவுகள் எடுக்க வேண்டிய நேரம்.
ஸ்டெம் விசா திட்டம்
ராம்னியின் கட்சியினரும் இந்த திட்டத்தை வரவேற்ற நிலையிலும் சில கருத்து வேறுபாடுகளினால் இன்னும் சட்ட வடிவம் பெறாமல் இருக்கிறது. அமெரிக்கப் பல்கலைகழகங்களும் வெளி நாட்டவர்களின் வருகையை ஊக்கப்படுத்த 'ஸ்டெம் விசா' திட்டத்தை வலியுறுத்தி வருகின்றனர். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா ஆட்சிக்கு வந்த நெருக்கடியான காலக்கட்ட்த்திலும் ஹெச்1 பி விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இந்தியர்களுக்கான வாய்ப்பு முற்றிலுமாக தடைபட்டு விடவில்லை. சற்று மாறி வேறு பாதையில் போக வேண்டியிருக்கலாம்.
இந்திய வர்த்தக மற்றும் அரசு முறை உறவு
ஆனாலும் ஆஃப்கானிஸ்தான் சீர்திருத்த நடவடிக்கையில் இந்தியாவை முக்கிய உறுப்பினராக்கிக் கொள்ள அமெரிக்கா உதவியது. பாகிஸ்தான் - சீனா உறவு நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் இந்திய உறவு இயல்பாகவே வலுவடைந்து வருகிறது. இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ற பொதுவான களத்தில் இரண்டும் இணைந்து செயல்படுவதில் தடைகள் எதுவும் இருக்காது.
பாகிஸ்தான், சீனா என்ற இரு பெரும் எதிரிகளை தனது நெருங்கிய நண்பர்களாகக் காட்டி பிரச்சாரம் செய்துவரும் ராம்னியைவிட, ஒபாமா மீண்டும் அதிபராவதே இந்தியாவுக்கு நல்லது. நன்மைகள் கிடைக்கிறதோ இல்லையோ... அட்லீஸ்ட் எதிர்விளைவுகள் இல்லாமலாவது இருக்குமல்லவா!
Comments