கெய்ரோ: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்ததால் தான்
அமெரிக்காவை சாண்டி புயல் தாக்கியதாக முஸ்லிம் தலைவர்கள் சிலர் டுவிட்டரில்
தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகத்தையும், இஸ்லாம் மதத்தையும்
இழிவுபடுத்தி கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்
என்ற பெயரில் படம் எடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். அவர் அப்படி
நபிகளை இழிவுபடுத்தி படம் எடுத்ததால் தான் அமெரிக்காவை சாண்டி புயல்
தாக்கியது என்று முஸ்லிம் தலைவர்கள் சிலர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
எகிப்தைச் சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின்
டுவீட்: "அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் பழிவாங்கினான் என்பதே எனது
கருத்து."
கொனீமின் டுவீட்டைப் பார்த்த ஒருவர்
டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும்,
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான்
சாண்டி என்னும் புனிதப் புயல் என்று கூறியுள்ளார். அவரது டுவீட்: அநீதி,
ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர்போன ஐ.நா. சபையின் கட்டிடத்தை
அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். அது தான் சாண்டி.
Comments