* எப்போதும் போதிய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.
* வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால், வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் வெடிப்புகள் இருந்தால் அவை சரியாகிவிடும்.
*
ரோஜாவின் இதழ்களை பச்சை பாலில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை
பேஸ்ட் செய்து, உதட்டில் தடவி வந்தால், உதடு நன்கு பிங்க் நிறத்தில்
இருப்பதோடு, வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.
* உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, தினமும் இரவில் படுக்கும் முன்பு, மில்க் க்ரீமை உதட்டில் தடவ வேண்டும்.
* உதட்டில் வறட்சியை நீக்க வெள்ளரிக்காயை வைத்து, தினமும் உதட்டிற்கு மசாஜ் செய்தால், வறட்சி நீங்கிவிடும்.
* வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவினால், உதட்டில் இருக்கும் வெடிப்புகள் போய்விடும்.
* ஆமணக்கெண்ணெயை உதட்டில் தடவி வந்தால், வறட்சி நீங்கி, உதடு பொலிவோடு காணப்படும்.
* கற்றாழையின் ஜெல்லை உதட்டில் தடவினால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது குணமாகும்.
ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.
Comments