‘நாய்’ பேச்சு விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்திய சென்னை பத்திரிகையாளர்கள்

 Chennai Journos Protest Against Dmdk சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ‘நாய்' என்றும் ‘உனக்கு பதில் சொல்ல உன் கம்பெனியா சம்பளம் கொடுக்கிறது' என்றும் கேள்வி எழுப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு "சம்பளம்" கொடுக்கும் போராட்டத்தை சென்னை பத்திரிகையாளர்கள் இன்று நடத்தினர்.
சென்னையில் பத்திரிகையாளர்கள் வாகனங்களில் தேமுதிகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் 100 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு விஜயகாந்துக்கு சம்பளம்
கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் அலுவலக வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தேமுதிக அலுவகலம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள், விஜயகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் இனி செய்தியாளர்கள் சந்திப்பே நடக்கும் என்று அறிவித்தனர்.

Comments