நெருங்கி வரும் 'நிலம்' புயல் .. பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை: நிலம் புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிலம் புயல் நாளை மாலை மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடக்கு கடலோர மாவட்டங்களில் கன மழையும், பலத்த காற்றும் வீசக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்த மாநில உயர் கல்வித்துறை இயக்குநர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments