எச்டிசி ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்லைனில் விலை குறைப்பு!

HTC One S and Desire V prices reduced in India on Saholicஒன் எஸ் மற்றும் டிசையர் வி என்ற இரண்டு எச்டிசி ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 33,590 விலையில், ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அடுத்த இரண்டு மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 28,900 விலையாக குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் அதே எச்டிசி நிறுவனம் புதிதாக டிசையர் வி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21,999 என்று அறிவிக்கப்பட்டது.

இப்பதோ இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்குமே ஆன்லைன் வலைத்தளங்களில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் எச்டிசி வாடிக்கையாளர்களுக்கு இது சந்தோஷத்தை அளிக்கும் செய்தியாக இருக்கும். எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும் ஸ்னாப்டிராகன் எஸ்-3 பிராசஸரை வழங்கும்.
எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போனில் 4.3 இஞ்ச் திரை வசதியினையும், 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். இதில் 8 மெகா பிக்ஸல் கேமார மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் பெற முடியும். எச்டிசி டிசையர் வி ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியோடு டியூவல் சிம் வசதியினையும் வழங்கும்.
டிசையர் வி ஸ்மார்ட்போனில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி, 1,650 எம்ஏஎச் பேட்டரி போன்ற வசதிகளையும் பயன்படுத்தி கொள்ள முடியும். எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 25,900 என்றும் எச்டிசி டிசையர் வி ஸ்மார்ட்போன் ரூ. 16,999 என்றும் விலை குறைப்பு செய்துள்ளது சஹோலிக் ஆன்லைன் வலைத்தளம்.

Comments