பேஸ்புக் 'ஓனரிடம்' ஏன் 'கிரே கலர்' டிசர்ட் மட்டும் நிறைய இருக்கு தெரியுமா?

 Why Zuckerberg Wears The Same Clothes Every Day 28 வயதான கோடீஸ்வரர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க். இவர் அணிவது எல்லாமே ஒரே நிறத்திலான டி சர்ட்தான்.அதாவது எப்பப் பார்த்தாலும் க்ரே கலர் டி சர்ட்தான் அணிவார். ஒரு வேளை துவைப்பாரா மாட்டாரா என்று கூட பலருக்கு சந்தேகம் வரும். அப்படி ஒரு அட்ட அடி அடிப்பார் கிரே கலர் டிசர்ட்டை. ஏன் இப்படி என்று அவரிடம் கேட்டால், என்னிடம் ஒரே கலரில் 20 டி சர்ட்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

மார்க் ஜூகர்பெர்க் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் நான் என்ன கலர் உடை அணிகிறேன் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. என்னிடம் ஒரே கலரில் 20 டி சர்ட்கள் இருக்கின்றன. என் மனைவி பிரிசில்லாவிற்கு இது நன்றாக தெரியும் என்றார்.
பின்னர் ஃபேஸ்புக்கின் எதிர்காலம் பற்றி பேசிய மார்க். ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் தனக்கு ஐபோன் 5 பரிசளித்ததை கூறினார். ஐ போன் 5 மிகச்சிறந்த டிவைஸ் இது இன்றைய காலத்திற்கு ஏற்றது என்றும் கூறினார்.
சமீபத்தில் ரஷ்யா சென்ற ஜூகர்பெர்க் பிரதமர் டிமித்ரி மெத்வதேவ் உடன் சந்தித்து பேசியதை தெரிவித்தார். அப்பொழுது டார்க் கலரில் சூட் அணிந்து சென்றதாகவும் கூறினார்.
மேலும் பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்தின் நினைவாக வெள்ளைநிற டி சர்டில் Facebook.com/Dmitry.Medvedev என்று பிரிண்ட் செய்து அதனை பரிசளித்ததாகவும் கூறினார் ஜூகர்பெர்க்.

Comments