இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீக்கதிர் விமர்சனம்
திரிணாமுல்
காங்கிரஸ் வெளியேறியதால் காலியாக கிடக்கும் ரெயில்வே துறையை, மத்திய
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, கொத்தித்தின்ன தி.மு.க., தேசியவாத
காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
எரிசக்தி துறையையும்
இக்கட்சிகள் கேட்டு அடம் பிடிக்கின்றன. ரெயில்வே, எரிசக்தித்துறை கிடைக்காத
காரணத்தால்தான் தி.மு.க. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை
எதிர்ப்பது போல் பாசாங்கு செய்கிறதாம்'' என்று தீக்கதிர் இதழில்
எழுதியிருக்கிறார்கள்.
திமுக நிலைப்பாடு
"மத்திய
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ஏற்கனவே மத்திய அமைச்சரவையில்
தி.மு.கழகத்தின் சார்பில் இடம் பெற்றுள்ளவர்களை தவிர, மேலும் தி.மு.க.
சார்பில் புதியதாக அமைச்சரவையில் இடம் கோருவதில்லை என்பதில் உறுதியாக
இருக்கிறேன்'' என்று நான் ஏற்கனவே அறிவித்து, அந்த பதில் நாளேடுகளில்
வெளியாகி இருக்கிறது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை
தி.மு.கழகம் வரவேற்காமல் எதிர்ப்பதென்பது இன்று நேற்றல்ல; 2006 தமிழக
சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே
அறிவித்துள்ளது. தி.மு.க. பொதுக்குழுவிலும் ஏற்கனவே, சில்லறை வர்த்தகத்தில்
அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த நேரத்திலேயேகூட சட்டப்பேரவையிலேயே இதனை
எதிர்த்து நானே அறிவித்திருக்கிறேன். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி
முதலீடு கூடாது என்பது கழகத்தின் கொள்கை நிலைப்பாடாகும் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.
Comments