புலிகளின் "பிஎப்எல்டி" என்ற தனிநாடு கோரும் அமைப்பு செயல்படுகிறது... தமிழக அரசு புது குண்டு!

 State Government Justifies Ban On Ltte Files Affidavit
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான் தடை சரிதான் என்பதற்கான ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு சரியானது என்பதற்கான ஆதாரங்களாக 2 வால்யூம் ஆவணங்களை இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும்
தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்தது. கியூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரி சம்பத்குமார் இட்ந்ஹ ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்குகள், அந்த அமைப்புடன் தொடர்புடையோரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இப்படியும் ஒரு அமைப்பா?
மேலும் தமிழீழத்தையும் தமிழகத்தையும் இணைத்து அகன்ற தமிழ்நாடு அமைப்பதற்காக விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்படுவதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு அமைப்பு தமிழகத்தில் இயங்குகிறதா? அல்லது அரசே உருவாக்கிவிட்டதா?

Comments