கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றிபெற்றவர் திடீர் மரணம்

 Man Dies After Winning Roach Eating Contest In Broward ப்ளோரிடா: ப்ளோரிடாவில் கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்றவர் பரிசினை பெரும் முன்பு திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரின் பெயர் எட்வர்டு ஆர்க்போல்டு வயது 32. வெள்ளிக்கிழமையன்று டெரிபீல்ட் பீச்சில் உள்ள பென் சிகெல் என்பவருக்கு சொந்தமான ஷாப்பில் நடைபெற்ற கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் அவர் பங்கேற்றார். ஆர்க்போல்டு உடன் 30க்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

பல டஜன் கரப்பான் பூச்சிகளை வேகம் வேகமாக விழுங்கினார்கள். போட்டி நேரம் முடிவடைந்த உடன் முடிவுக்காக காத்திருந்தனர். இதில் அதிக அளவில் கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஆர்க்போல்டு திடீரென மரணமடைந்தார்.
விபரீதமான இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஷெரீப் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பாரத நிகழ்வு என்று போட்டியை நடத்திய பென் சிகெல் தெரிவித்தார். இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்களுக்கு தாங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறோம் என்று போட்டியாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று சிகெலின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
கரப்பான் பூச்சியை சாப்பிட்டு மிகப்பெரிய பரிசினை வென்ற நபர் எதிர்பாராமல் மரணத்தை தழுவியது ப்ளோரிடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments