கேலக்ஸி பிரிமியர் போன் 4.65 இன்ச் அளவில் 720பி எச்டி சூப்பர் அமோலெட்
தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த போனில் 1.5 ஜிஹெர்ட்ஸ்
டூவல்
கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போனின் பின்பக்கத்தில்
8எம்பி கேமராவும் அதுபோல் வீடியோ உரையாடல்களுக்கான 2எம்பி சூட்டரும் உள்ளன.
இந்த கேலக்ஸி பிரிமியர் போனில் 8ஜிபி அல்லது 16ஜிபி சேமிப்பு இருக்கும்.
மேலும் எஸ்டி கார்டு மூலமாக இந்த சேமிப்பை விரிவுபடுத்த முடியும். அதோடு
இந்த போனில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளம் இருக்கிறது. மேலும்
இந்த போனில் எச்எஸ்டிபிஎ, எச்எஸ்யுபிஎ, டூவல் பேண்ட் வைபை, ப்ளூடூத்,
என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு வசதிகளும் உள்ளன.
இந்த போன் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெர்மனியில் விற்பனைக்கு வந்துவிடும்
என்று தெரிகிறது. அதன் பின் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த போன்
விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மேலும் இந்த போன் 480 ஈரோக்களுக்கு
அதாவது ரூ.32,912க்கு விற்பனைக்கு வர இருக்கிறது.
Comments