கேலக்ஸி மியூசிக் டியோஸ் என்ற இந்த ஸ்மார்ட்போன், இதன் வடிவமைப்பில்
நிச்சயம் பலரது கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்கவரும்
வகையில் ப்ளூ, எல்லோ மற்றும் சில்வர் என்று மூன்று வண்ணங்களில்
உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஒரு முக்கிய அம்சத்தினையும்
கொண்டிருக்கும்.
சாம்சங் கேலக்ஸி மியூசிக் ஸ்மார்ட்போனில் டியூவல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் சாம்சங் ஸ்மார்ட்போனின்
முன்பக்த்திலேயே பொருத்தப்பட்டிருக்கும். இதன் 3 இஞ்ச் திரையின் மூலம் 240 X
320 இஞ்ச் திரை துல்லியத்தினையும் கொடுக்கும்.
ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்
இந்த ஸ்மார்ட்போன், 850 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொண்டதாக இருக்கும். 4 ஜிபி
இன்டர்னல் மெமரி வசதி மற்றும் 32 ஜிபி வரை மெமரியினை விரிவுபடுத்தி கொள்ள
மைக்ரோஎஸ்டி ஸ்லாட் வசதியினையும் பெறலாம்.
3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படங்களையும், வீடியோ
ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். 3ஜி நெட்வொர்க், வைபை ப்ளூடூத் போன்ற
சவுகரியங்களை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த பேட்டரி பேக்கப்
இருக்கும்? என்ற கேள்வியும் எழும்பலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி மியூசிக் ஸ்மார்ட்போனில் 1,300 எம்ஏஎச்
பேட்டரியினை பெறலாம். இது மட்டும் அல்லாமல் டியூவல் சிம் வெர்ஷன் கொண்ட
கேலக்ஸி மியூசிக் டியோஸ் என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்கிறது
சாம்சங். இந்த ஸ்மார்ட்போன்களின் விலை பற்றிய விவரம் இன்னும் சரிவர
அறிமுகம் செய்யப்படவில்லை.
Comments