சோனியா பயணச் செலவுகளை காங். வெளியிட வேண்டியதுதானே.. மோடி கேள்வி!

 Why Isn T Congress Revealing Details Of Sonia Expenses
டெல்லி: சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணச் செலவு விவரத்தை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 1880 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக மோடி பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மோடி விடுவதாக இல்லை. நான் சொல்வது பொய் என்று காங்கிரஸ் நிரூபிக்குமானால் நான்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்று அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது காங்கிரஸுக்கு மேலும் ஒரு அதிரடி கேள்வியைப் போட்டுள்ளார் மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், அன் தலைவர்களும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்களை கண்டிப்பாக நாட்டு மக்களிடம் தெரிவித்தாக வேண்டும்.
ரூ. 1880 கோடி வரை சோனியாவுக்காக செலவிடப்பட்டிருப்பதாக குஜராத்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. என் மீது பாயும் காங்கிரஸ் கட்சி ஏன் அந்த நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை...என்று கேட்டுள்ளார்.
மோடிக்கு மன நிலை சரியில்லை என்பதையே இது காட்டுவதாக முன்னதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியிருந்தார். இதுகுறித்து மோடி கூறுகையில், எனக்கு மன நிலை சரியில்லை, டாக்டரிடம் போக வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.
அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், நான் டாக்டர்களிடம் போவதாக இருந்தால் எனது மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர்களிடம்தான் போவேன். காரணம், அவர்கள் எனது மக்கள், எனது மாநிலத்தவர், எனது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார் மோடி.

Comments