நீ என்னை என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள், எனக்குக்
கவலையில்லை. நான் இப்படித்தான் இருப்பேன். உனக்காக நான் விட்டுக் கொடுக்க
மாட்டேன் என்று கூறுவோர்தான் பலரும் உள்ளனர்.
ஆனால் மன நல நிபுணர்கள்
என்ன சொல்கிறார்கள் தெரியுமா... விட்டுக் கொடுங்கள், உங்கள் துணை உங்களை
விட குரல் உசத்திப் பேசுகிறார்களா, நீங்கள் தணிந்து போய் விடுங்கள்.
உங்களுக்கு வருத்தமாக, ஏமாற்றமாக இருக்கலாம்.. ஆனாலும் தணிந்து போவதும்,
பணிந்து போவதும் உங்களை நிச்சயம் தலை நிமிரவே வைக்கும் என்பதே அவர்கள்
தரும் அட்வைஸ் ஆகும்.
அதை விட இன்னொரு முக்கியமான அட்வைஸையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். அது அழுகை...
பேசித்
தீர்க்க முடியவில்லையை...அழுது தீர்த்து விடுஙக்ள் என்பதே அவர்கள் தரும்
அட்வைஸ். உங்களுக்குள் அழுத்தம் அதிகமாக அதிகமாக அது உங்களை வருத்தும்,
உடல் நலனைப் பாதிக்கும். அதற்குப் பேசாமல் நன்றாக மனம் விட்டு அழுது
விடுங்கள், ஈகோ பார்க்காதீர்கள், உங்களது துணையைப் பேசி சரி செய்ய
முடியவில்லையா, கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் மனது விட்டு அழுது விடுங்கள்.
அது உங்களை இயல்பாக்க உதவும் என்பதே அவர்கள் தரும் அட்வைஸ்.
இப்படி
அழுது தீர்க்கும்போது உங்களது மனதை, உங்களது இதயத்தை, உங்களது உண்மையான
அன்பை உங்களது துணை உணர, புரிந்து கொள்ள, உங்களது காதலின் ஆழத்தை புரிந்து
கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என்கிறார்கள் இவர்கள்.
உங்களது துணை
உங்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறாரா அல்லது நிராகரிக்க முயல்கிறாரா, நீ
எனக்கு் தேவை என்பதை உங்களது செயல்பாடுகளால் உணர வையுங்கள் என்றும் இந்த மன
நல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை.
ஆனால் வந்த பிரச்சினையை புத்திசாலித்தனமாக, சாதுரியமாக தீர்ப்பதுதான்
பலருக்குப் பிரச்சினையாக உள்ளது. பிரச்சினைகளைத் தீர்க்க முயலும்போது ஈகோ
பார்ப்பது, கெளரவம் பார்ப்பது, சங்கடப்படுவது வேலைக்கு ஆகாது. மாறாக,
யாராவது ஒருவர் இறங்கிப் போய் விட வேண்டும். அப்போதுதான் அடுத்தவர், தனது
துணையின் உண்மையான அன்பையும், கவலையையும், காதலையும் உணர வாய்ப்பு
கிடைக்கும் என்பதும் இவர்கள் சொல்லும் இன்னொரு அட்வைஸ்.
எனவே
பிரச்சினைகளைத் தீர்க்க நன்றாகப் பேசுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள்,
தேவையானால் மனசார அழுது விடுங்கள். அழுத்தம் குறையும், தெளிவு கிடைக்கும்,
தீர்வும் புலப்படும்.
Comments