வைர கிரகம் கண்டுபிடிப்பு... இன்னுமொரு ஆகாய ஆச்சர்யம்!

 a new planet that s real diamond லண்டன்: நாம் வாழும் பூமியை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

நமது வான்வெளியில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் நிறைந்துள்ளன. ஆனால் அவை அளவில் சிறியவை. ஆனால் இப்போது நமது பூமி கிரகத்தை விட பெரிய அளவிலான வைரங்கள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளன. ஆனால் இப்போது கண்டறியப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட் எனப்படும் கனிமத்துடன் வைரம் நிறைந்த கிரகமாக இது உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
55 கேன்க்ரி என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தின் சுற்றளவு பூமியைவிட 2 மடங்கு பெரிதானதும் என்றும் தெரியவந்துள்ளது. அதைப் போலவே அடர்த்தியோ 8 மடங்கு அதிகமானது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்குள் புதைந்து கிடக்கும் படிமப்பாறைகளை போல் உறுதியானதாகவும் இந்த கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
பிரான்சில் உள்ள நிறுவனம் ஒன்று, இந்த கிரகத்தின் மூன்றில் ஒரு பகுதி, அதாவது, பூமியை போன்ற சுற்றளவு கொண்ட பகுதி முழுவதுமே வைரமாக இருக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பானது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments