‘இந்தியா-பாகிஸ்தான் ஒரே கரன்சியை பயன்படுத்த வேண்டிய கால நெருங்கிவிட்டது’

லாகூர்: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே கரன்சியைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய காலமிது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஜெஹாங்கீர் பாதர் பரிந்துரைத்துள்ளார்.
சண்டிகர் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் லாகூர் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் கருத்தரங்கில் பேசிய அவர்,
அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்ட், யூரோ ஆகிய வெளிநாட்டு கரன்சிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே கரன்சியைப் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்றார்.
மேலும், டிசம்பர் மாதத்துடன் 1,200 பொருள்கள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதன் பிறகு இரு நாடுகளிடையிலான வர்த்தகம் மேலும் பெருகும் என்றார் அவர்.

Comments