டீசல் கார் விற்பனை சூடு பறக்கும் அளவுக்கு அதன் விலையும்
வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் கையை கடிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது.
பெட்ரோல் கார்களைவிட ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை டீசல் கார்கள் விலை
அதிகமாக இருக்கிறது. இதனால், நடுத்தர வாடிக்கையாளர்களுக்கு இன்னமும் டீசல்
கார்கள் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், மார்க்கெட்டில்
இருக்கும் குறைந்த விலை கொண்ட டீசல் கார்களை இந்த தொகுப்பில்
பார்க்கலாம்.
டாடா இன்டிகா இவி2

மார்க்கெட்டில் மிகக்குறைந்த விலை டீசல் கார்
டாடா இன்டிகா இவி2தான். ரூ.4.2 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை
செய்யப்படுகிறது. 70 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல்
எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. தாராள இடவசதி, அதிக மைலேஜ் இதன் பலம்.
லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது. தற்போது
சலுகைகளுடன் ஏராளமான வசதிகளுடன் கிடைக்கிறது.
செவர்லே பீட்

ஸ்டைலான ஹேட்சேபேக் கார் வேண்டும்
என்பவர்களுக்கு சிறந்த சாய்ஸ். இந்தியாவின் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்
என்ற பெருமையை பெற்றது. லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று
குறிப்பிடுகிறது. ரூ.4.53 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை
செய்யப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் 58 பிஎச்பி ஆற்றலை
வெளிப்படுத்தும்.
ஃபோர்டு ஃபிகோ

பிரிமியம் ரகத்தில் இருக்கும் குறைந்த விலை
டீசல் கார் ஃபோர்டு ஃபிகோதான். ஃபிகோவின் எல்எக்ஸ்ஐ பேஸ் வேரியண்ட் டீசல்
மாடல் ரூ.4.8 லட்சம் விலையில் கிடைக்கிறது. 68 பிஎச்பி ஆற்றலை
வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சர்டிபிகேட் கொடுத்துள்ளது.
ஸ்விப்ட் டீசல் பேஸ் வேரியண்ட்டை ஒப்பிடும்போது ரூ.70,000 வரை குறைவு.
மாருதி ரிட்ஸ்

மாருதியின் குறைந்த விலை டீசல் கார். ரூ.5.31
லட்சம் ஆரம்ப விலையி்ல் விற்பனை செய்யப்படுகிறது. 1.3 லிட்டர் எஞ்சின்
பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய ரிட்ஸ் லிட்டருக்கு 23.2 கிமீ மைலேஜ்
தரும் என்கிறது அராய் சான்று. அதிக ஹெட்ரூம், சிறந்த பெர்ஃபார்மென்ஸ்
விரும்புவர்களுக்கு ஏற்ற சாய்ஸ்.
Comments