விஜயகாந்த் மறுபடியும் டென்ஷன், எரிச்சல், கோபம்..!

 Vijayakanth Angry Speech Once More மதுரை: சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் படு அநாகரீகமாக நடந்து கொண்ட விஜயகாந்த், இன்று மதுரையிலும் செய்தியாளர்களிடம் சீறலுடன் பேசியதால் மறுபடியும் பதட்டமாகியுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்புவதற்காக நேற்று விமான நிலையம் வந்த விஜயகாந்த்திடம், உங்களது கட்சி எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வரைப் போய்ப் பார்க்கிறார்களே என்று கேட்டதற்கு நாயே, நாயே, மதுரைக்கு வந்து பாருடா, அடிச்சுருவேன் என்று படு அநாகரீகமாக பேசி அசிங்கமாக நடந்து கொண்டார் விஜயகாந்த்.

மேலும் நாட்டில் டெங்குப் பிரச்சினை உள்பட பல பிரச்சினை இருக்கிறது. அதைப் பற்றிக் கேட்க வேண்டியதுதானே என்றும் செய்தியாளர்களுக்கு டோஸ் விட்டார்.
இந்த நிலையில் இன்று மதுரையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார் விஜயகாந்த். அப்போதும் செய்தியாளர்கள் வழக்கம் போல அவரை அணுகினர். நேற்றுதான் 'பொறுப்பாக' பேசவில்லை என்று கடிந்து கொண்டார் விஜயகாந்த், எனவே இன்று பொறுப்பாக கேள்வி கேட்போம் என்று நினைத்து செய்தியாளர்கள், மின்வெட்டுப் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டனர்.
பொறுப்பாக கேள்வி கேட்டதால் மிகவும் பொறுப்பாக பதிலளிப்பார் விஜயகாந்த் என்று நம்பிய செய்தியாளர்களுக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது. வழக்கம் போல கோபமும், பொறுமலும், டென்ஷனாகப் பதிலளித்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் அளித்த பதில் இதுதான்...
''ஆமாம் மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள்... பிறகு என்னிடம் வந்து ஏன் கேட்கிறீர்கள்''
நல்ல 'பொறுப்பான', 'பொறுமையான' தலைவர்தான் தேமுதிகவுக்கு கிடைத்துள்ளார்!

Comments