மோடிதான் பிரதமர் வேட்பாளரா? ஜெத்மலானி விவகாரத்தில் பம்முகிறது ஆர்.எஸ்.எஸ்

டெல்லி: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்ற ஜெத்மலானி கருத்தை ஏற்றுக் கொண்டது பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நழுவலான பதிலையே வெளிப்படுத்தியிருக்கிறது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு ராம்ஜெத்மலானி கடிதம் அனுப்பியிருந்தார். இதனையே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடனான சந்திப்பின் போது தாம் வலியுறுத்தியதாகவும் அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக் கொண்டதாகவும் ஜெத்மலானி கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஜெத்மலானியை மோகன் பகவத் சந்தித்தது உண்மை. ஆனால் கத்காரிக்கு கடிதம் எழுதியது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது.
பாஜகவின் அன்றாட செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் ஈடுபடுவதில்லை என்று நழுவலான பதிலைக் கூறியிருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
இதனிடையே அசாமில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நிதின் கத்காரி, அசாமில் அன்னிய குடியேற்றத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதம் தலை தூக்கியிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் எல்லைகள் சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Comments