சமூக ஆர்வலரான
அன்னா ஹசாரே, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்தார். அவரது அமைப்பில்
தீவிரமாக இணைந்து செயல்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால் புதிய அரசியல்
கட்சியை
தொடங்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் அரசியல் கட்சி தொடங்க அன்னா ஹசாரே
ஆதரவு தரவில்லை. அத்துடன் தமது பெயரையோ படத்தையோ புதிய அரசியல் கட்சிக்கு
பயன்படுத்தக் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனாலும்
அன்னா ஹசாரேவின் கொள்கைகளே தமது கட்சியின் இலட்சியம் என்று கெஜ்ரிவால்
அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை காந்தி ஜெயந்தியன்று தமது புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதில் கெஜ்ரிவால் உறுதியாக இருக்கிறார். இதற்காக அன்னா ஹசாரேவை நேரில் சந்தித்து "ஆசீர்வாதம்" பெற்றிருக்கிறார்.
அடேங்கப்பா... இந்த அரசியல் நல்லா இருக்கே!
Comments