கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க மமதா பானர்ஜிக்கு அழைப்பு

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்
மமதா பானர்ஜிக்கு கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில். மேற்கு வங்காள மாநிலத்தில் ஹரிபூர் அணு மின் நிலையத்துக்கு எதிராக, துணிச்சலான நிலையை எடுத்தவர் மமதா. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட இடிந்தகரை கிராமத்துக்கு தாங்கள் வரவேண்டும் என்று அக் கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments