சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி
விழாவையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, கொட்டும்
மழையையும் பொருட்படுத்தாமல் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் கிராமத்தில்
ராமநாதபுரம்
மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இன்றுகாலை 105வது ஜெயந்தி விழா மற்றும்
குருபூஜை விழா நடந்தது. இதில் அரசின் சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்
செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, முனுசாமி,
செந்தில் பாலாஜி, காமராஜ், சுந்தரராஜன், கோகுல இந்திரா, செந்தூர் பாண்டியன்
ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல பல்வேறு கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் வந்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் ஜெ. அஞ்சலி
சென்னை
நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலை இன்று மலர்களால்
அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட
தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த
படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கொட்டும்
மழையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் உடன் வந்து கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு
திமுக
சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் டி.கே.எஸ்.
இளங்கோவன், ஜெ. அன்பழகன், டி.ஆர்.பாலு மகன் ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி
செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாமக
சார்பில் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் பல்வேறு கட்சியினர், அமைப்பினரும்,
தேவர் சமூகத்தினரும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Comments