மகாபலிபுரம்
சென்னைக்கு
50 கிலோ மீட்டர் தொலைவில்தான் மகாபலிபுரம் இருக்கிறது. இது ஒரு
சுற்றுலாத்தலம். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்லவர் காலத்து
கற்சிற்பங்கள் சிற்பக் கலையின் சாட்சியமாக இருந்து வருகிறது. ஏற்கெனவே
இயற்கையின் கோரத்தாண்டவத்தால் பல கற்கோவில்கள் கடலுக்குள் புதையுண்டு
போயிருக்கின்றன. தற்போதும்
கூட எப்போது வேண்டுமானாலும் எஞ்சியிருக்கும்
கற்சிற்பங்களையும் கடல் கபளீகரம் செய்துவிடக் கூடும். இந்நிலையில் நாளை
மகாபலிபுரத்தில் நிலம் புயல் கரையைக் கடந்தால் நூற்றாண்டுகள் வரலாறு பேசும்
எச்சங்கள் ஏதாவது மிஞ்சுமா என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கவலை!
கல்பாக்கம்
தமிழகத்தில்
கால் நூற்றாண்டுகாலமாக செயல்பட்டு வந்தாலும் கல்பாக்கம் அணு உலையால்
பாதிப்பு இருந்து வருகிறது என்றே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி
வருகின்றனர். தற்போது கூடங்குளம் அணு உலைக்கு மிகக் கடுமையான போராட்டம்
ஓராண்டாக நடந்து கொண்டிருக்கிறது.
நேற்று கூட சென்னையில் 25க்கும்
மேற்பட்ட இயக்கங்களின் தலைவர்கள், தொண்டர்கள் கூடங்குளம் அணு உலையை
எதிர்த்து சட்டசபை முற்றுகைப் போராட்ட நடத்தி கைதாகி இருந்தனர்.
இந்நிலையில் நாளை நிலம் புயல் கரையைக் கடக்கும் என்று சொல்லப்படுகிறது.
கல்பாக்கத்தில்
கரையைக் கடக்கும் போது கடலை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் அணு
மின்நிலையத்திற்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே
எழுந்துள்ளது. மேலும் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கப் போகும்
புயல் காற்றில் அணு உலைகள் என்னாகுமோ என்றும் கேள்விக்கணைகளை அடுக்கி
வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
Comments