இளைய ஆதீனம் நித்யானந்தா நீக்கம்

மதுரை: மதுரை இளைய ஆதினம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அறிவித்துள்ளார். மேலும் நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து என போலீசில் புகார் கொடுத்துள்ளார். நித்யானந்தா நீக்குவது தொடர்பான முடிவை யார் வற்புறுத்தலின் பேரிலோ, தூண்டுதலின் பேரிலோ எடுக்கவில்லை
எனவும், தனது சொந்த முடிவும் என கூறியுள்ள மதுரை ஆதினம், ஆதினத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்களில் பொது மக்கள் கலந்து கொண்டு மதுரை ஆதினத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Comments