தமிழ்நாட்டில் மட்டுமல்ல லண்டனிலும் அப்படித்தான் போல! - பிரிட்டன் பிரதமருக்கு அதிர்ச்சி

 Uk Prime Minister David Cameron Joi டுவிட்டரில் கணக்கு தொடங்கியுள்ள இங்கிலாந்து பிரதமரை மக்கள் கண்டபடி திட்டி அர்ச்சனை செய்துள்ளதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆட்சியாளர்களையோ, சினிமா நடிகர்களையோ கண்டபடி திட்ட வேண்டும் என்றால் அதற்கு சமூகவலைத்தளங்கள்தான் சரியான சாய்ஸ் என்று மக்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் போல. தமிழ்நாட்டில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கிய
முன்னாள் முதல்வர் கருணாநிதியை கண்டபடி திட்டி எழுதி குவித்தனர் தமிழ்நாட்டு மக்கள். இதனால் அவருடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கிவைக்க வேண்டியதாகிவிட்டது.
இதே நிலை இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனுக்கும் ஏற்பட்டுள்ளது. டேவிட் கமரூன், சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து பேசிவந்தார். இந்நிலையில் அவர் கடந்த 6ஆம் தேதி டுவிட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கினார்.
இதன் மூலம் மக்களுக்கு கருத்துகளை நேடியாகவே கொண்டு சேர்க்கலாம் என்பது அவரது நோக்கம். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.நான்கு நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருந்தனர்.
ஆனால், அது சந்தோஷப்படும்படியாக இல்லை. பெரும்பாலானோர், டேவிட் கமரூனை கண்டபடி திட்டி இருந்தனர். அவரது சொத்து குவிப்பையும் விமர்சித்து இருந்தனர். அத்துடன் அருவருக்கத்தக்க புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனால் டேவிட் கமரூன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆட்சியாளர்களை திட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவது என்பது எல்லா நாட்டுமக்களுக்கும் இருக்கும் போல.

Comments