பெரிய பிரபலங்களுடன் பேசுவது என்பது அசாத்தியமான விஷயமாக கருதப்பட்டு
வந்தது. ஆனால் இந்த ட்விட்டர் வலைத்தளத்தில் எல்லாமே இப்போது
சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். எத்தகைய பிரபலங்களுடனும் ட்விட்டர்
போன்ற
சமூக வலைத்தளத்தின் கருத்துக்கள் மூலம் தகவல்களை எளிதாக பகிர்ந்து
கொள்ள முடியும்.
சினிமா, விளையாட்டு, அரசியல் என்று ஒட்டு மொத்த பிரபலங்களுடனும் இந்த
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எளிதாக கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும்.
அந்த வகையில் ட்விட்டரில் இணைந்திருக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின்
பட்டியல் இங்கே இன்டியன் செலப்ஸ்ஆன் ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் பாலிவுட்
நட்சத்திரங்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது. அமிதாப் பச்சன்,
ப்ரியங்கா சோப்பரா, ஷாருக்கான், அமீர்கான், சச்சின் டென்டுல்கர் என்று
ஆரம்பித்து, ட்விட்டரில் இருக்கும் பிரபலங்களின் விவரங்கள் நீண்டு கொண்டே
போகிறது. ட்விட்டரில் இணைந்திருக்கும் பிரபலங்களின் பட்டியல் விவரங்களும்
இங்கே சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
Comments