கசாப்பின் கருணை மனுவை நிராகரித்தது உள்துறை

 Home Ministry Rejects 26 11 Terrorist Ajmal Kasab டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.
மும்பையில் 2008ம் ஆண்டு பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நவம்பர் 26ம் தேதி ஊடுறுவினர். பின்னர் அவர்கள் 3 நாட்கள் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தில் சிக்கி 166 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளில் 9 பேரை கமாண்டோப் படையினர் சுட்டுக் கொன்று விட்டனர். போலீஸ்காரர் துக்காராமின் தீரச் செயலால் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான்.

கசாப்புக்கு மும்பை தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை பாம்பே உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. பி்ன்னர் உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இதையடுத்து கருணை மனுவை சமர்ப்பித்தான் கசாப்.
இந்த மனுவை முதலில் மகாராஷ்டிர மாநில காவல்துறை அமைச்சகம் நிராகரித்தது. இந்த நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகமும் நிராகரித்து விட்டது.
இதுதொடர்பான பரிந்துரைக் கோப்பை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

Comments