ஹூஸ்டன்: பூமியிலிருந்து 650 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் சாவைப் படம் பிடித்துள்ளது விண்ணில்
சுற்றி வரும் நாஸா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் ஸ்பிட்செர் தொலைநோக்கி.
நட்சத்திரத்தின் மையப் பகுதியில் இருந்து அதன் கருவும் சுற்றியுள்ள
வாயுக்களும் அண்டத்தில் பல கோடி மைல்களுக்கு வெடித்துச் சிதறியுள்ளது.
ஹைட்ரஜன் எல்லாமே எரிந்து போய்...
ஹெலிக்ஸ் நெபுலா என்ற இந்த நட்சத்திரம் ஒரு காலத்தில் சூரியனைப் போல
இருந்த ஒரு நட்சத்திரமாகும். அதில் நடந்த அணு இணைப்பு காரணமாக அதிலிருந்த
ஹைட்ரஜன் எல்லாமே எரிந்து போய் ஹீலியமாக மாறிவிட கடைசியில் ஹீலியத்தையும்
எரித்து கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜனாக மாற்றிவிட்டு, வெடித்துச்
சிதறியுள்ளது.
நமது சூரியனிலும் இதே தான் நடக்கப் போகிறது....
இதன் அளவு நமது பூமியின் அளவு தான் இருக்கும். ஆனால், இதன் நிறை பல
கோடி மடங்கு இருக்கும். அதாவது, இந்தக் கருவின் ஒரு டீ ஸ்பூன் நிறை, ஒரு
சிறிய மலையின் எடையளவுக்கு இருக்குமாம்..
இந்த நட்சத்திரத்துக்கு ஏற்பட்ட கதி தான் 5 பில்லியன் ஆண்டுகளில் நமது சூரியனிலும் நடக்கப் போகிறது.
Comments