நான் நிதி மந்திரிய்யா.. அப்படீன்னா என்னோட பணத்தையெல்லாம் கொடு... டிவிட்டரில் 'சாமி'யாட்டம்!

 Swamy Slams Pc On Twitter டெல்லி: ராபர்ட் வத்ரா மற்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வைத்து ஒரு கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி டிவிட்டை வெளியிட்டு பிரளயம் கிளப்பியுள்ளார் சுப்பிரமணியம் சாமி.
ஒண்ணும் இல்லாட்டியும் கூட உலகத்தையே தன் பக்கம் திரும்ப வைப்பதில் ஜெகஜால கில்லாடி சு.சாமி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சுப்பிரமணியம் சாமி.

பாஜக கூட்டணியில் அவராகவே போய் சேர்ந்து கொண்டு சோனியா காந்தி குடும்பத்திற்கு எதிராக ரொம்பவே சத்தம் போட்டுக் கொண்டிருப்பவர். இப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கிண்டல் மேசேஜை வெளியிட்டு கலகலக்க வைத்துள்ளார்.
இந்த டிவிட் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மட்டும் குறி வைத்து எழுதப்படவில்லை. மாறாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவையும் சேர்த்து வாரியுள்ளார் சாமி.
இதோ அந்த டிவிட்
ப.சிதம்பரத்திடம் Robber: ஏய், உன்னிடம் உள்ள எல்லாப் பணத்தையும் கொடு, இல்லாட்டி...
ப.சிதம்பரம்: நான் யார்னு தெரியுமா, நிதியமைச்சர் ப.சிதம்பரம்
Robber: அப்படியா, அப்படீன்னா உன்கிட்டே இருக்கும் என்னோட பணத்தையெல்லாம் கொடு!
இதில் Robber என்று திருடனை சாமி குறிப்பிடுகிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவர் 'யாரைக்' குறிப்பிடுகிறார் என்பது உங்களுக்குப் புரிகிறதுதானே...!

Comments