டெங்குவின் உக்கிர தாக்கம் - தொடர் பலிகளால் பொதுமக்கள் அதிர்ச்சி

 Dengue Fever Claims 2 Lives Chennai சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவடங்களில் 100க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நேற்று டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். சென்னை ஐஸ் அவுஸ் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவர் சாம்ஜி, திருவேற்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன மகன் சுதாகரன் ஆகியோர் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர். சுதாகரன், பிளஸ் டூ மாணவர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல்
மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 3 நாட்களில் 50 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 14 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். நாகை மாவட்டத்தில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. கோவையில் டெங்கு பாதிப்புக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கிராமங்களில் முகாமிட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் இரு நாட்களுக்கு மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். 3 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகினர். மேலும் 12 சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 சிறுமிகள் பலியாகி உள்ளனர். இதனால் பொது
மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments