திருச்சி: தமிழ் அமைப்புகளின் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பால்
பிரதமர் மன்மோகன்சிங் மகள் உபீந்தர் சிங் அவசரமாக திருச்சியில் இருந்து
விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார்.
ஆன்மீக பயணம்
பிரதமர்
மன்மோகன்சிங்கின் மகள் உபீந்தர் சிங், ஒரு வார காலம் ஆன்மிக
சுற்றுப்பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.
அவருடன் அவரது
கணவர் விஜய் தன்காரும் வந்து இருந்தார். அவர்கள் அங்கிருந்து
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சனிக்கிழமை திருச்சிக்கு வந்தனர்.
திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்களுக்கு
சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இருவரும் தஞ்சை மாவட்டத்தில்
உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதாக
திட்டமிடப்பட்டு இருந்தது. இதனிடையே மத்திய அரசுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்திற்கு பிரதமர் மகள் உபீந்தர் சிங்
வந்தால் அவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப் போவதாக சில
அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இதனால் உபீந்தர் சிங்கும், அவரது
கணவரும் தங்களது தஞ்சை மாவட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ரத்து செய்து
விட்டு அவசரமாக நேற்று பிற்பகல் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றனர்.
அங்கிருந்து தனியார் விமானம் மூலம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னைக்கு
சென்றனர்.
Comments