துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் மட்டுமே
மனுத் தாக்கல் செய்திருந்ததால் அவர் இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தின்போது
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமனை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா உரை நிகழ்த்தினார்.
முதல்வரின் உரை:
பேரவைத்
துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன் சாதாரண
விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதுகலைப் பட்டம், இளம் ஆய்வு முனைவர்
பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். ஆரம்ப காலம் தொட்டு தன்னை அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டவர். கட்சியில் பல்வேறு
பொறுப்புகளை வகித்தவர்.
சகோதரர பொள்ளாச்சி ஜெயராமனை பொறுத்தவரையில்
தொடக்கத்திலிருந்தே, அவர் பொது வாழ்விலே ஈடுபட்ட நாள் முதல் கொண்ட
கொள்கையில் பிடிப்புடன் இருப்பவர். தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து
முடிக்கும் ஆற்றல் பெற்றவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்
காலத்தில் கதர் கிராமத் தொழில் வாரிய உறுப்பினராக நீண்ட நாள்
பணியாற்றியவர். தமிழ்நாடு துணிநூல் கழகத்தின் தலைவராக பணியாற்றிய அனுபவமும்
அவருக்கு உண்டு. 2001 ஆம் ஆண்டு முதன் முறையாக பொள்ளாச்சி சட்டமன்றத்
தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மாமன்றத்திலே சட்டமன்ற
உறுப்பினராக திறம்பட பணியாற்றி இருக்கிறார். தொழில் துறை அமைச்சராகவும்,
உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவமும்
அவருக்கு உண்டு.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும்
பொள்ளாச்சி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றியவர்.
2011 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் உடுமலைப்பேட்டை
சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றி
வருகிறார். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும்
பணியாற்றியதோடு மட்டுமல்லாமல்; எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக
பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.
எனவே, ஆளும் கட்சி மற்றும்
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலை அவருக்கு நன்கு தெரியும்.
இதன் காரணமாக, நடுநிலைமை என்பது அவருடன் ஒன்றிப் போய் இருக்கும். எனவே,
பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர்.
பொள்ளாச்சி
ஜெயராமன் அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மை கொண்டவர். கட்சிப்
பணிகள் மட்டுமின்றி மக்கள் நலப் பணிகளையும் சிறப்புடன் ஆற்றும் திறமை
கொண்டவர். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பாங்கினைக் கொண்டவர். இந்த
மாமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் பங்கு கொண்டு தனது தனித் தன்மையை
வெளிப்படுத்தியவர் சகோதரர் ஜெயராமன். இந்தப் பேரவையின் துணைத் தலைவராக
இருப்பதற்குத் தேவையான குணங்களையும், பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்.
பொள்ளாச்சி
ஜெயராமன் நல்லவர், வல்லவர், படித்தவர், நல்ல அடக்க உணர்வுடன் எந்தப்
பொருளையும் கூர்ந்து கவனித்து முடிவு எடுக்கும் தன்மை படைத்தவர். பேரவைத்
தலைவருக்கு துணையாக மட்டுமல்லாமல் இணையாகவும் செயல்படக் கூடியவர்.
அனைத்து உறுப்பினர்களுடைய நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்று, பேரவைத் தலைவர் அவர்களுக்கு உறுதுணையாக திறம்பட பணியாற்றுவார் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பினை நல்குவார்கள் என்ற எனது நம்பிக்கையைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்கிக் கொண்டு அமைகிறேன் என்று முதல்வர் பேசினார்.
அனைத்து உறுப்பினர்களுடைய நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்று, பேரவைத் தலைவர் அவர்களுக்கு உறுதுணையாக திறம்பட பணியாற்றுவார் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பினை நல்குவார்கள் என்ற எனது நம்பிக்கையைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்கிக் கொண்டு அமைகிறேன் என்று முதல்வர் பேசினார்.
Comments