இனி ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

 We Will Allign With Only Caste Parties Says Ramadoss வானூர்: ஜாதிகளே வேண்டாம் என்று பாரதியார் அன்று பாடி வைத்தார். ஆனால் ஜாதிக் கட்சிகள் மட்டும்தான் எங்களுக்கு வேண்டும் என்று பச்சையாகவே பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
வானூர் சட்டசபைத் தொகுதியில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் பேசிய பேச்சைக் கேளுங்கள்..

150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒட்டுமொத்த வன்னியர்களும் மாம்பழத்துக்கு ஓட்டு போட்டால் வன்னியன் ஆளுவான். மண்ணில் நெற்பயிரோடு வீரத்தையும் விளைவித்தவன் வன்னியன்.
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு சென்ற பிறகு சிலர் கட்சி கொடி கொடுத்து இலவசங்களை அளித்து, சினிமாவையும், மதுவையும் கொடுத்து கெடுத்து விட்டனர். வரும் தேர்தலில் திராவிட கட்சிகள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற பயம் இருந்தது.
இங்குள்ள இளைஞர்களின் எழுச்சியை பார்க்கும்போது அந்த பயம் இப்போது இல்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க சென்றால் அவர்களை விரட்டி அடியுங்கள். திமுக - அதிமுக கட்சிகள் நம்மை ஏமாற்றி விட்டன. தமிழகம் இருளில் மூழ்கி உள்ளது.
45 ஆண்டுகளாக நல்ல கல்வியை கொடுக்க தவறிவட்டனர். விவசாயிகள், விவசாயத்தில் லாபம் இல்லை என விவசாய தொழிலை கைவிட்டு விட்டனர். விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலாக மாறி உள்ளது. விவசாயத்தை பற்றி கவலைப்படுவது ராமதாஸ் மட்டுமே.
கலைஞரும், ஜெயலலிதாவும் ஆண்ட வம்சத்தை சேர்ந்தவர்களா? எல்லா சாதியினரும் ஆண்டு விட்டனர். எனவே வன்னியன் ஆள வேண்டும். நான் தற்போது புதிய பாதையை ஏற்படுத்தி உள்ளேன். இனி ஒரு காலும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி கிடையாது. சாதி கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளேன்.
யாதவர் - முதலியார் - நாயுடுக்களுடன்தான் கூட்டணி
யாதவர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சாதி கட்சிகளுடன் தான் கூட்டணி. அவர்களிடம் வன்னியர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பேன். மேலும் அவர்களுக்குள்ளான இடஒதுக்கீட்டையும் பெற்று தருவேன். ஆடு, மாடுகளை இலவசமாக கொடுத்து எங்களை அடிமையாக்க வேண்டாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான,இலவச, கட்டாய கல்வியை கொடுப்போம். விசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் ராமதாஸ்.
பரந்துபட்ட பேச்சுதான்...!!

Comments