கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் குள்ளமான கார்

World Lowest Car On Road Built Japan School Students உலகின் மிக மிக குள்ளமான கார் என்ற பெருமையை ஜப்பானின் மிராய் பெற்றிருக்கிறது. இந்த கார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஜப்பானிலுள்ள அசகுச்சியிலுள்ள ஒகயாமா சான்யோ பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களின் வழிக்காட்டுதல்களுடன் இந்த காரை வடிவமைத்துள்ளனர். மிராய் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் வெறும் 45.2 செமீ உயரம் கொண்டது.

சாலையில் ஓட்டும் தரத்திற்கு வடிவமைத்திருப்பதுதான் இந்த காரின் முக்கிய அம்சம். 6 மாத கால கடின முயற்சியில் இந்த காரை வடிவமைத்துள்ளனர். பேட்டரியில் இயங்கும் இந்த கார் மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லும். ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். இந்த காரை சமீபத்தில் சாலையில் இயக்கி பார்த்தனர்.
மிக குள்ளமாக இருப்பதால் எதிரில் அல்லது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் எங்கே மேலே ஏற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் அனைத்து பக்கங்களிலும் பெரிய கார்கள் புடைசூழ மிக பாதுகாப்போடு இயக்கி பார்க்கப்பட்டது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் தாங்கள் வடிவமைத்த கார் இடம்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், ஊக்கமும் தருவதாக காரை மாணவர்கள் தெரிவித்தனர். மிராய் என்றால் எதிர்காலம் என்று அர்த்தமாம். காரை வடிவமைத்த மாணவர்களுக்கும்தான்..!!

Comments