நடிகர் சிவகுமார் திடீரென்று கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை ஒரு தகவல் பரவியது.
விசாரித்தபோது, 'இது வெறும் வதந்திதான்'' என்று சிவகுமார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
"சிவகுமாரும்,
குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை சென்றார்கள்.
அப்போது, சிறுநீரக கல்
பரிசோதனை செய்து கொள்வதற்காக, சிவகுமார் அங்குள்ள
வேதநாயகம் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் மகன் நடிகர் சூர்யாவும்
சென்றிருந்தார்.
சிவகுமாருக்கு டாக்டர் கந்தசாமி மருத்துவ பரிசோதனை
செய்தார். பரிசோதனை முடிந்து சிவகுமார் வீடு திரும்பி விட்டார். அவர் நலமாக
உள்ளார்,'' என்று சிவகுமார் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
சிவகுமாரின் பிஆர்ஓவும் பின்னர் இதுகுறித்து தனியாக அறிக்கை அனுப்பியிருந்தார்.
Comments