ஜெயலலிதாவுக்குத்தான் இந்தியாவை ஆளக் கூடிய தகுதி இருக்கிறது; அடித்து சொல்லும் ஓ.பி.எஸ்.

 Jaya Will Decide Next Pm Panneerse O Panneerselvam நாகப்பட்டினம்: இந்தியாவை ஆளக் கூடிய தகுதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டங்கள்
மக்களுக்கு பயனளிக்கக் கூடியவை. 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஓராண்டில் செய்துவிட்டார் அவ்ர். தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கோ ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனைக் கண்டு பயம்! அதனால்தான் டெசோ என்ற மாநாட்டை கையில் எடுத்துக் கொண்டு நாடகம் போடுகிறார்!.
மத்திய அரசில் தி.மு.க. 13 ஆண்டு காலம் அங்கம் வகித்தும் தமிழக வாழ்வாதார பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட முயற்சி எடுத்தவர் ஜெயலலிதாதான். இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தகுதி இந்தியாவிலேயே ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் உள்ளது. நாட்டை ஆளக் கூடிய தகுதி ஜெயலலிதாவுக்குத்தான் உள்ளது என்றார் அவர்.

Comments